கோர தாண்டவம் ஆடிய மழை

வெள்ளக்காடாக மாறிய கேரளம்

       கடவுளின் தேசம்  என அழைக்ககப்படும் கேரளாவில் வரலாறு காணாத வகையில்  மழை பெய்துள்ளது. வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்ததால் வெள்ளத்திலும், மண் சரிவிலும் சிக்கி 380 பேருக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வால் 8,00,000 மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர். பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியுள்ளது.



           பல்வேறு கட்டடங்கள் மண்சரிவில் சிக்கி  முழுவதுமாக தரைமட்டமாகியுள்ளது. சாலைகளும், பாலங்களும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளது.இதில் ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் , உடைமைகளையும் இழந்துள்ளனர்.

           இதில் அணைகள் முழுவதும் நிரம்பியதால் அணைகளில் இருந்து தண்ணீர்] திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி ஏராளமான விலங்குகள் இறந்து போனதாக கேரள அரசு அறிவித்து உள்ளது.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பெய்த மழையின் விவரம்:-
   1.ஆலப்புழா
               சராசரியை  விட 28% மழை பெய்துள்ளது.

   2.இடுக்கி
                சராசரியை  விட 90% மழை பெய்துள்ளது.

   3.எர்ணாகுளம்
              சராசரியை  விட 47% மழை பெய்துள்ளது.

   4.கண்ணூர்
               சராசரியை  விட 10% மழை பெய்துள்ளது.

   5.காசர்கோடு
              சராசரியை  விட 12% மழை பெய்துள்ளது.

   6.கொல்லம்
              சராசரியை  விட 52% மழை பெய்துள்ளது.

   7.கோட்டையம்
               சராசரியை  விட 51% மழை பெய்துள்ளது.

   8.மலப்புரம்
               சராசரியை  விட 53% மழை பெய்துள்ளது.

   9.பாலக்கோடு
              சராசரியை  விட 75% மழை பெய்துள்ளது.

 10.வயநாடு
              சராசரியை  விட 29% மழை பெய்துள்ளது.

 11.திருச்சூர்
             சராசரியை  விட 17% மழை பெய்துள்ளது.

 12.பத்தனம்திட்டா
            சராசரியை  விட 28% மழை பெய்துள்ளது.

 13.திருவனந்தபுரம்
            சராசரியை  விட 48% மழை பெய்துள்ளது.

 14.கோழிக்கோடு
             சராசரியை  விட 32% மழை பெய்துள்ளது.


         

      வழக்கத்தை விட அதிகமான இடங்களில் மழை பெய்து இருப்பதால் கேரளா முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

0 Comments