வெற்றியின் முதல் படி தோல்வி மற்றும் தேடல்


           வெற்றியின் முதல் படி தோல்வி மற்றும் தேடல். இவை இரண்டும் தான் ஒரு மனிதனை நேர்த்தியான பாதைக்கு எடுத்துச் செல்லும். வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையான உழைப்பு, சரியான முறையில் திட்டமிடுதல், எண்ணங்களை சரியாகப் பயன்படுத்தத்த வேண்டும்.  எதிர்மறை எண்ணங்களை விலக்கி கொண்டு நல்ல எண்ணங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவருமே அதிகமான தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். அதனால்தான் அவர்களால் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்று சரியாக செயல்படுகின்றனர். 

         தோல்வியை கண்டவுடன் நாம் செய்யும் தவறான ஒன்று நாம் செய்யும் செயலை விட்டுவிடுவது அல்லது தள்ளிப் போடுவது. நாம் இறங்கிய செயலில் இருந்து  பின்வாங்கும் எண்ணத்தை முழுவதுமாய் தவிர்த்து விட வேண்டும். வெற்றியாளர் ஒரு போதும் பின்வாங்க மாட்டார்கள். அவர்களது எண்ணம் மற்றும் குறிக்கோள் ஒன்றை மட்டுமே நோக்கும்.

          தோல்வி என்றுமே மனதில் வலியை உண்டாக்கும், அந்த வலியை தாங்கும் எண்ணத்தை மனதில்  ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அந்த  மன உறுதி வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில் உன்னுடன் துணையாய் வரும். வெற்றியை நோக்கும் பயணத்தில் தோல்வி மட்டும் நிரந்தரம் இல்லை. வெற்றிக்கும் இடம் உண்டு என்ற உயர்வான எண்ணத்தை உன்னுடைய மனதில் பதிய வைத்துக் கொள். 



           வெற்றியை நோக்கி பயணிக்கும் பயணத்தில்  நிறைய தடங்கல் வரும், அதை தகர்த்து எறிந்து செல்ல வேண்டும். அதை தவிர்த்து கண்ணீர் விட்டு கலங்கி என்ன பயன்  உண்டு. சோகம் மட்டுமே  உன்னை ஆட்கொள்ளும். எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும் மனதில் சுமந்து வருகின்ற உன்னால் இந்த தோல்வி மட்டும் உன்னை என்ன செய்து விட போகிறது.

            நீ பிறக்கும் போதே போராட்டத்துடன் தான் பிறந்தாய். எதுவும் தெரியாத போதே போராடி வென்ற உன்னால் இப்பொழுது மட்டும் உன்னால் எப்படி தோல்வியை மட்டும் சந்தித்து வாழ முடியும். ஒருமுறை அல்ல ஓராயிரம் முறை போராடு, நீ நினைத்த செயல் நிச்சயம் வெல்லும்.

             நாம் செய்யும் செயலில் மன மகிழ்ச்சியுடன்  போராட வேண்டும். இந்த குணம்  இருந்தால் எதையும் வெற்றி கொள்ளலாம். தோல்வி அடைந்தவுடன் மனம் தளர்ந்து போகாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அப்பொழுதே நமக்குத் தேவையான விஷயங்களை தேர்வு செய்ய முடியும்.

           இன்றைய காலக்கட்டத்தில் மிக அதிகமான போட்டிகள்  இருக்கும், போட்டிகளில் நாம் வெற்றியடையும் என்ற எண்ணம் மட்டும் போதாது அதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். விடாமுயற்சியே  விஸ்வரூப வெற்றி. ஆகவே நம்முடைய  தேடலில் மிகவும் ஆழமாகவும் புரிதலுடனும் செயல்பட வேண்டும். ஒரு செயலை செய்யும் முன்பு அச்செயலில் வரும் சாதகங்கள், பாதகங்கள் என்னவென்று ஆராய வேண்டும், அதைப் பற்றி ஆராயாமல் எந்தவித புரிதலும் இல்லாமல் இறங்கும்போது தோல்வி  எளிதில் வந்துவிடும்.

          திட்டமிட்டு புரிதலுடன் செயல்படும் போது தோல்வி எளிதில் உன்னை ஆட்கொள்ளாது. ஒருவேளை தோல்வி வந்தாலும் எளிதில் வென்று விடலாம். தோல்வியின் காரணம் எளிதில்  புரிந்து விடும். உயர்ந்த  எண்ணங்களுடன்  நீ எதிர்கொள்ளும் ஒவ்வொரு செயலும் உன் மனதோடு ஒன்றுபட்டு செயல்படுவாய். ஆதலால் எழுதி உன்னால் வெற்றி பெற முடியும். 
       போராட்டம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதற்கு மனதை ஒரு நிலைப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றி என்ற ஒரு வார்த்தையில் நீ பட்ட அத்தனை தோல்விகளுக்கும், வலிகளுக்கும் பதில் உண்டு.

        வெற்றி எளிதில் கிடைத்து விட்டாள் அதற்கான மதிப்பு சரியாக புரியாது. ஆனால் பல்வேறு தோல்விகளை சந்தித்த பிறகு வரும் வெற்றி  மிகுந்த மன மகிழ்ச்சியை கொடுக்கும். அதன் பிறகு எதையும் எதிர்கொள்ளும் எண்ணம் மனதில் உருவாகும்.
  
        நீ தோல்விகளைச் சந்திக்கும் போது உன்னிடம் உன்னைச் சுற்றி உள்ளவர்கள் மற்றும்  சார்ந்தவர்கள் விட்டுவிடு என்று சொல்லுவார்கள். நீ எடுத்த செயலில் உன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உன்னிடம்  இருக்கும் பட்சத்தில், யாருக்காகவும் அதை விட்டு விடாதே . ஏனென்றால் உனக்கு மட்டுமே உன்னுடைய வலிமை என்னவென்று தெரியும் மற்றவர்களுக்கு உன் பலவீனம் தெரிந்திருக்கலாம் ஆனால் உன்னுடைய உயர்ந்த எண்ணங்கள், போராடும் குணமும் உனக்கு மட்டுமே தெரியும்.


        காலங்களின் மாற்றத்தினால் வெற்றியின் தேடலில் உண்மையான தெளிவு உனக்குள் வரும்.  உன்னுடன் பழகும் அனைவரும் உனக்காக பிறந்தவர்கள் அல்ல. எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உன்னுடன் பழகும் எவரையும் இந்த தேடலின் பொது இழந்து விடாதே. நல்ல எண்ணம் கொண்டவர்கள் உன்னை தட்டிக்கொடுத்து கொண்டு இருப்பார்கள். உன் பலவீனத்தை எவ்வாறு பலமாக மாற்ற முடியும் என்று சொல்வார்கள்.

         வெற்றிக்கான தேடலில் நல்ல  எண்ணங்களும், உயர்ந்த நோக்கமும், சரியான சிந்தனையும் உன்னிடம் இருக்கும் பட்சத்தில் இவ்வுலகில் நீ எதை செய்தாலும் ,எத்தனை தோல்விகள் வந்தாலும் வெற்றி உன்வசமே. 

0 Comments